சென்னை: சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சிபிஎம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''ரம்மி உள்ளிட்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டின் காரணமாக பணத்தை இழந்து தமிழகத்தில் இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் தங்களின் சேமிப்பு பணம், சொத்துக்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டின் பாதகமான விளைவுகளின் பின்னணியை ஆய்வு செய்யவும், அதனை ஒழுங்குபடுத்த ஆலோசனைகள் கோரியும் நீதியரசர் கே. சந்துரு தலைமையில் நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சிபிஎம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Author: செய்திப்பிரிவு