சென்னை: “ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்தடுத்து இருவர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, தற்கொலை எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளதால் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விழுப்புரம் வேடப்பட்டு முரளி, திருச்சி மாவட்டம் மணப்பாறை வில்சன் ஆகியோர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளி ஆனதால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்தடுத்து இருவர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து தற்கொலை எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளதால் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு