அமராவதி: ஆந்திர மாநில பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை நேற்று காலையில் கூடியதும், பொதுக் கூட்டம், ஊர்வலம், பேரணிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து விவாதிக்க வேண்டுமென்று தெலுங்கு தேசம் கட்சியினர் சபாநாயகரிடம் முறையிட்டனர். இதற்கு சபாநாயகர் தம்மிநேனி சீதாராம் அனுமதி வழங்கவில்லை.
இதனால், தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி அங்கு அடிதடி ஏற்பட்டது. இதில் தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் பால வீராஞ்சநேய சுவாமி மற்றும் புச்சைய்ய சவுத்ரி ஆகியோர் தாக்கப்பட்டதாக அந்த கட்சியினர் சபாநாயகரிடம் முறையிட்டனர்.
ஆந்திர மாநில பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை நேற்று காலையில் கூடியதும், பொதுக் கூட்டம், ஊர்வலம், பேரணிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து விவாதிக்க வேண்டுமென்று தெலுங்கு தேசம் கட்சியினர் சபாநாயகரிடம் முறையிட்டனர்.
Author: என்.மகேஷ்குமார்