இந்து மதக் கோயில்களைப் பொறுத்தவரை, பல்வேறு காரணங்களால் வழிபாட்டு முறைகள் மாறுபடுகின்றன. அந்த வகையில், ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த கொங்ஹள்ளி கிராமத்தில் உள்ள மல்லிகார்ஜுனா கோயில், ஆண்கள் மட்டுமே வழிபடும் கோயிலாக விளங்குகிறது.
சத்தியமங்கலம் வனப் பகுதியில் உள்ளது தாளவாடி மலைக் கிராமம் உள்ளது. அங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொங்ஹள்ளி கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான மல்லிகார்ஜுனா கோயில் உள்ளது. இங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமனை தரிசித்த பின்னரே, மல்லிகார்ஜுனரைத் தரிசிக்க வேண்டுமென்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.இக்கோயிலில், ஆஞ்சநேயர் சன்னதி வரை மட்டுமே பெண்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
மல்லிகார்ஜுனா அங்கிருந்து கிளம்பிவிட்டார். மல்லிகார்ஜுனா பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடிப்பதால், இக்கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
செய்திப்பிரிவு