சென்னை: உயர் ரத்த அழுத்த நோயால் ஆண்களை விட பெண்களே தற்போது அதிகம் பாதிக்கப்படுவதாக ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி தெரிவித்தார்.
சர்வதேச உயர் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி முதல்வர் ரேவதி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர், பொது மருத்துவத் துறை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இறுதி ஆண்டு மாணவர்கள் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், எந்த மாதிரியான சிகிச்சைகளை எடுத்து கொள்ள வேண்டும் என்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நாடகம் ஒன்றை அரங்கேற்றினர்.
உயர் ரத்த அழுத்த நோயால் ஆண்களை விட பெண்களே தற்போது அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி தெரிவித்தார்.
Authour: செய்திப்பிரிவு