புதுடெல்லி: "ஆட்சேர்ப்பு முறையில் பாஜக அரசு ஏற்படுத்தியுள்ள மாற்றங்களால் ஊழல் மற்றும் பாரபட்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த ‘ரோஜ்கார் மேளா'-வில் மத்திய அரசு பணிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71,000 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில் காணொலி வாயிலாக கலந்து கொண்டார். விழாவில் பேசிய பிரதமர் கூறியதாவது, "முன்பெல்லாம் அரசு வேலைக்கு விண்ணப்பிப்பது கடினமானதாக இருந்தது. விண்ணப்பபடிவத்தைப் பெற மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். தற்போது அரசு வேலைக்கு விண்ணப்பிப்பது முதல் அதற்கான முடிவுகளை அறிவிப்பது வரை அனைத்து செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளுக்கு நேர்காணல்கள் நீக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ஆட்சேர்ப்பு முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களால் ஊழல், பாரபட்சம் போன்றவைகள் தடுக்கப்பட்டுள்ளன.
“ஆட்சேர்ப்பு முறையில் பாஜக அரசு ஏற்படுத்தியுள்ள மாற்றங்களால் ஊழல் மற்றும் பாரபட்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு