உத்தம்பூர்: தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃப்ரூக் அப்துல்லா ஆற்றிய உரை ஒன்று சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. "கடவுள் ராமரை அல்லாவே அனுப்பி வைத்தார்" என்று பாகிஸ்தான் எழுத்தாளர் ஒருவர் ஒரு புத்தகத்தில் எழுதியிருந்ததை மேற்கோள்காட்டி ஃபரூக் அப்துல்லா பேசியதே இந்த சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
காஷ்மீரின் உத்தம்பூர் நகரில் ஃபரூக் அப்துல்லா பேசுகையில், "நான் இன்று உங்கள் அனைவருக்கும் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். கடவுள் ராமர் முழுக்க முழுக்க இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானவர் இல்லை. அவர் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், மற்றவர்களுக்கும் உரித்தானவர். அதேபோல்தான் அல்லாவும் முஸ்லிம்களுக்கான கடவுள் மட்டுமே அல்ல. அவரும் அனைவருக்குமான கடவுள்.
“கடவுள் ராமரை அல்லாவே அனுப்பிவைத்தார்” என்று பாகிஸ்தான் எழுத்தாளர் ஒருவர் ஒரு புத்தகத்தில் எழுதியிருந்ததை மேற்கோள்காட்டி ஃபரூக் அப்துல்லா பேசியதே சர்ச்சைக்குக் வழிவகுத்துள்ளது.
Author: செய்திப்பிரிவு