சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கக் கூடும். மேலும், பொதுச் செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வரலாம் என்று தகவல் பரவியதால், அதிமுக தொண்டர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் முன் திரண்டு காவல் காத்தனர். இன்று காலை வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவித்தனர். சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி, வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தாக்கக் கூடும். மேலும், பொதுச் செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வரலாம் என்று தகவல் பரவியதால், அதிமுக தொண்டர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் முன் திரண்டு காவல் காத்தனர்.
Author: செய்திப்பிரிவு