சென்னை: அம்மா உணவகத்துக்கு வழங்கப்படும் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அம்மா உணவக ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் முதன்முதலாக 2013-ம் ஆண்டு 207 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. இங்கு இட்லி,பொங்கல்,சாம்பார் சாதம், கலவை சாதம், தயிர் சாதம், சப்பாத்தி உள்ளிட்ட உணவுகள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. இவ்வாறு குறைவான விலையில் சென்னையில் பலர் அம்மா உணவங்களை நம்பி உள்ளனர். கரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு ஏழை மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அம்மா உணவகத்துக்கு வழங்கப்படும் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அம்மா உணவக ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Author: கண்ணன் ஜீவானந்தம்