சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சிப் பள்ளியில் படித்து அரசு மருத்துவமனைகளில் 40 ஆண்டுகளாக பணியாற்றும் 40 செவிலியர்கள் ஒன்று கூடி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
சென்னை மருத்துவக் கல்லூரியின் (எம்எம்சி) கீழ் செயல்படும் செவிலியர் பயிற்சிப் பள்ளியில் 1983-ம் ஆண்டு டிப்ளமோ நர்சிங் படித்த 40 பேர் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செவிலியர் கண்காணிப்பாளராகவும், அரசு செவிலியர் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி வருகின்றனர். செவிலியர் துறையில் 40 ஆண்டுகளாக பணியாற்றி இந்த 40 செவிலியர்கள் இன்று (பிப்.10) சென்னை மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சிப் பள்ளியில் ஒன்று கூடி ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர். மேலும், தங்களுக்கு வகுப்புகள் எடுத்த ஆசிரியர்களை கவுரப்படுத்தினர்.
சென்னை மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சி பள்ளியில் படித்து அரசு மருத்துவமனைகளில் 40 ஆண்டுகளாக பணியாற்றும் 40 செவிலியர்கள் ஒன்று கூடி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
Authour: செய்திப்பிரிவு