Advertisement
டெல்லி: மக்களவை உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். அரசு பங்களாவை காலி செய்ய மக்களவை செயலகம் உத்தரவிட்ட நிலையில் செயலாளருக்கு ராகுல் கடிதம் எழுதியுள்ளார். 20 ஆண்டுகளாக அரசு பங்களாவில் இருந்த என்னுடைய மகிழ்ச்சியான தருணங்களை மறக்க முடியாது. விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement