மதுரை: மதுரையில் அரசு ஊழியரின் மரணத்திற்கு தமிழக அரசின் கருவூலத் துறை, வேளாண்மைத் துறையையே காரணம் என்று கூறி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை வேளாண்மைத் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலத்தில் பணியாற்றிய சண்முகவேல், தமிழக அரசின் கருவூலத் துறையின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பின் (IFHRMS) இணைய திட்டத்தின் தொழில்நுட்ப பிரச்சினையால் ஓய்வின்றி இரவு பகலாக வேலைபார்த்த பணிச்சுமையால் மார்ச் 31-ம் தேதி அலுவலகத்தில் இருக்கையில் அமர்ந்தவாறு மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு காரணமாக வேளாண்மைத் துறை நிர்வாகத்தையும் தமிழக அரசின் கருவூலத் துறையையும் கண்டித்து இன்று மதிய உணவு இடைவேளையின்போது மதுரை மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கம் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார்.
அரசு ஊழியரின் மரணத்திற்கு காரணமாக தமிழக அரசின் கருவூலத்துறை, வேளாண்மைத்துறையை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Author: சுப. ஜனநாயகசெல்வம்