Advertisement
மதுரை: மதுரையில் அரசு பள்ளியில் தற்காப்பு பயிற்சி பெறும் மாணவிகளுக்கு ஊட்டச்சத்துக்காக உலர் பழங்கள் வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலையான கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, சிலம்பம் கற்பிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் மதுரை மாவட்டம் திருமோகூரில் உள்ள மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 28 மாணவிகள் சிலம்ப பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு வாரம் 2 நாள் சிலம்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.
மதுரையில் அரசு பள்ளியில் தற்காப்பு பயிற்சி பெறும் மாணவிகளுக்கு ஊட்டச்சத்துக்காக உலர் பழங்கள் வழங்கப்படுகிறது.
Authour: கி.மகாராஜன்
Advertisement