வேலூர்: தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் மதுரை, வேலூர் மண்டலத்தில் அதிகமாக தலா 20-க்கும் மேலான அரசு கல்லூரிகள் இயங்குகின்றன. இக்கல்லூரிகளில் காலை, மதியம் என, இரு சுழற்சி முறையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பல்வேறு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய உறுப்புக் கல்லூரிகளிலும் படிப்படியாக அரசுக் கல்லூரிகளாக மாற்றப் பட்டுள்ளன. இங்கு அரசுக் கல்லூரிகளில் பணியாற்றிய பேராசிரியர்கள் பணி மூப்பு அடிப்படையில் முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலும் அரசு கல்லூரிகளில் 2-வது சுழற்சி வகுப்புகளுக்கு நிரந்தர உதவி பேராசிரியர்கள் இன்றி, கவுரவ விரிவுரையாளர்கள் மூலமே பாடமெடுக்கப்படுகிறது. இதன்படி, தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் ஏற்கெனவே ரூ.12,000 மற்றும் 15 ஆயிரம் மாதச் சம்பளமாக வழங்கப்பட்டது. ஒரே கல்லூரியில் யூஜிசி கல்வித் தகுதியில் பணியாற்றும் ரெகுலர் உதவி பேராசிரியர்களுக்கு ரூ.80 ஆயிரத்தை தாண்டியும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் என்ற வேறுபாட்டில் பணிபுரிகின்றனர். இவர்கள் தங்களின் குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து ஓராண்டுக்கு மேலாக மாதம் ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 100 -க்கும் மேற்பட்ட அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் மதுரை, வேலூர் மண்டலத்தில் அதிகமாக தலா 20க்கும் மேலான அரசு கல்லூரிகள் இயங்குகின்றன.
Author: வி.சீனிவாசன்