உடுமலை / கோவில்பட்டி / கிருஷ்ணகிரி: தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் அரசம்பட்டி தென்னை, மூலனூர் குட்டை முருங்கை, விளாத்திகுளம் முண்டு வத்தல் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு இந்த ஆண்டில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மூலனூர் வட்டார பகுதிகளில் அதிக அளவில் விளையும் முருங்கையும் அதில் இடம் பிடித்துள்ளது. மூலனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. முருங்கைக்கு ஏற்ற மண் வளம், குறைவான நீர் நிர்வாகம் ஆகிய காரணங்களால் ஆண்டுதோறும் முருங்கை சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் அரசம்பட்டி தென்னை, மூலனூர் குட்டை முருங்கை, விளாத்திகுளம் முண்டு வத்தல் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு இந்த ஆண்டில் புவிசார் குறியீடு
Author: செய்திப்பிரிவு