சென்னை: காவல் துறை விசாரணை நேர்மையாக நடப்பதற்கு, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2014-ம் ஆண்டு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, லஞ்சம் வாங்கி, மோசடி செய்ததாக, அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த தற்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் வாங்கிய லஞ்ச பணத்தை திருப்பிக்கொடுத்துவிட்டதாக கூறி, அவர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் 2021-ம் ஆண்டு உத்தரவிட்டது.
காவல் துறை விசாரணை நேர்மையாக நடப்பதற்கு, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Author: செய்திப்பிரிவு