புதுச்சேரி: “ஆட்சியாளர், அமைச்சரவையின் அதிகாரத்தை துணைநிலை ஆளுநர் கபளீகரம் செய்து வருகிறார்” என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் சிவா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று முதல்வர் துறையின் மானிய கோரிக்கைகள் மீது எதிர்கட்சித் தலைவர் சிவா பேசியதாவது: ''புதுச்சேரி மாநிலத்தில் இன்னும் எவ்வளவு காலத்துக்கு பொறுப்பு ஆளுநரை வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்வது. இதுவே மாநில வளர்ச்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. அவரையேக் கூட முழு நேர ஆளுநராக நியமிக்கட்டும். இந்திய அரசியல் சட்டம் ஆட்சியாளர்களுக்கும், அமைச்சரவைக்கும் என்னென்ன அதிகாரங்களும், பொறுப்புகளும் உள்ளது என்பதை வரையறுத்துள்ளது. ஆனால் ஆட்சியாளர் அமைச்சரவையின் அதிகாரத்தையும் கபளீகரம் செய்து வருகிறார்.
ஆட்சியாளர், அமைச்சரவையின் அதிகாரத்தை ஆளுநர் கபளீகரம் செய்து வருகிறார் என்று புதுச்சேரி சட்டப் பேரவையில் எதிர்கட்சித் தலைவர் சிவா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
Author: அ.முன்னடியான்