பகோடா: கொலம்பிய நாட்டில் அமேசான் காடுகளில் விழுந்து நொறுங்கிய விமானத்திலிருந்து உயிர் பிழைத்த 4 குழந்தைகள் வனப்பகுதிக்குள் காணாமல் போன நிலையில், அவர்கள் 17 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்தது என்ன? – கடந்த 1-ஆம் தேதி 3 பெரியவர்கள் 4 குழந்தைகள் சென்ற விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. விபத்தில் 3 பெரியவர்களும் உயிரிழந்துவிட, குழந்தைகள் காட்டுக்குள் திசை மாறிப் போயினர். விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட விமானி இன்ஜின் கோளாறு ஏற்பட்டதாகக் கூறியுள்ளார். ஆனால், அதன்பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து, விமான நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று தேடுதல் வேட்டை தொடங்கியது.
கொலம்பிய நாட்டில் அமேசான் காடுகளில் விழுந்து நொறுங்கிய விமானத்திலிருந்து உயிர்பிழைத்த 4 குழந்தைகள் வனப்பகுதிக்குள் காணாமல் போன நிலையில் அவர்க 17 நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Author: செய்திப்பிரிவு