கலிபோர்னியா: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சீக்கியர்கள் வழிபாட்டுத்தலமான குருத்துவாராவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர். கலிபோர்னியா மாகாணம் சாக்ரமென்டோ பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.
இது தொடர்பாக சாக்ரமென்டோ கவுன்ட்டி ஷெரீஃப் கூறுகையில், "நடந்த சம்பவம் இரு தனி நபர்களுக்கு இடையேயான வெறுப்பின் காரணமாக நடந்துள்ளது. துப்பாக்கி குண்டு பாய்ந்த இருவருமே ஆபத்தான நிலையில் உள்ளனர். ஆகையால் இது வெறுப்பினால் நடந்த இனவாத குற்றம் ஏதுமில்லை என்று உறுதியாகிறது" என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சீக்கியர்கள் வழிபாட்டுத்தலமான குருத்துவாராவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.
Author: செய்திப்பிரிவு