Advertisement
மதுரை: "தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமில்லை. நான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது வழக்கமானதே" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (மார்ச்.23) டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பு பற்றி பல்வேறு ஊகங்கள் நிலவிவந்தன. அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள அண்ணாமலை அமைச்சர் அமித் ஷாவிடம் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
“தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமில்லை. நான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது வழக்கமானதே” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement