Advertisement
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (மார்ச் 23) அவசரமாக டெல்லி சென்றார். இதன்படி சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலமாக ஆளுநர் டெல்லி புறப்பட்டு சென்றார். இதனைத் தொடர்ந்து மாலை உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தி உள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement