“நான் ஒரு பெண் என்பதால்தான் எனது அத்தனை பிரச்சினைகளில் இருந்தும் என்னை தைரியமாக மீட்டுக்கொண்டு வந்திருக்க முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஒரு நடிகையாக, திடீரென கூடிவிடும் உடல் எடை அதிகரிப்பின் மூலம் உண்டாகும் மன அழுத்தங்களை அவ்வளவு எளிதில் கடந்து போய்விட முடியாது. ஹைப்போதைராய்டிஸமும் பிசிஓஎஸ் பிரச்னைகளிலும் பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டு வந்திருக்கிறேன்” என்று தன்னம்பிக்கை அனுபவங்களைப் பகிர்கிறார் ‘காதல்’ சரண்யா.
“எனக்கு அப்பா இல்லை. அம்மாவும் நானும் மட்டும்தான். அம்மா சின்ன வயசிலேருந்து என்னை நடிப்பு உலகிற்குள் கூட்டி வந்துவிட்டார். ஆனாலும் எனக்கென்னவோ அப்போது சினிமா துறையில் பெரிதாக ஈடுபாடு வரவேயில்லை. ‘காதல்’, ‘பேராண்மை’ மாதிரியான பெரிய படங்கள் அமைஞ்சபோதும் அடுத்து என்னனு வழிகாட்ட யாருமில்லை. சரியான படங்களைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை.
நான் அன்று தயங்கி வீட்டிற்கு உள்ளேயே கிடந்துவிடாமல் வெளியே வரப்போய்தான், பலர் இருட்டில் இருந்த என்னை வெளிச்சத்திற்கு கூட்டி வந்திருக்கிறார்கள்.
Authour: ஜி.காந்தி ராஜா