சென்னை: “நீர்நிலைகளில் எவ்வித பாதுகாப்பும் இன்றி குளிக்கச் செல்வதால் ஏற்படும் ஆபத்தை மாணவர்களுக்கு எடுத்துரைப்பதுடன், அனைத்து நீர்நிலை பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பூர் நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நீர்நிலைகளில் மூழ்கி மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது முழு ஆண்டுத் தேர்வுகள் முடிந்து வீடுகளில் இருக்கும் மாணவர்கள், கோடை வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆபத்தை உணராமல் குளிக்கச் சென்று சேற்றில் சிக்கி உயிரிழக்கும் நிலை உள்ளது.
“நீர்நிலைகளில் எவ்வித பாதுகாப்பும் இன்றி குளிக்கச் செல்வதால் ஏற்படும் ஆபத்தை மாணவர்களுக்கு எடுத்துரைப்பதுடன், அனைத்து நீர்நிலை பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
Author: செய்திப்பிரிவு