Advertisement
சென்னை: அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கதர் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். கதர் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கதர் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மடத்துக்குளம் எம்.எல்.ஏ மகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில் அளித்தார்.
Advertisement