மதுரை: தாம்பரத்தில் இருந்து மார்ச் 18 முதல் மார்ச் 23 வரை புறப்பட வேண்டிய தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா ரயில் மற்றும் மார்ச் 19 முதல் மார்ச் 24 வரை நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா ரயில் ஆகியவை நெல்லை- நாகர்கோவில் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம் கோட்டப் பகுதியில் மேலப்பாளையம் – நாங்குநேரி ரயில் நிலையங்கள் இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, புதன்கிழமை முதல் மார்ச் 22 வரை பகல் நேர ரயில் போக்குவரத்தில் சில மாற்றம் செய்யப்படும் என, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணத்தால் அந்த அறிவிப்பில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் இருந்து மார்ச் 18 முதல் மார்ச் 23 வரை புறப்பட வேண்டிய தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா ரயில் நெல்லை- நாகர்கோவில் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Author: என். சன்னாசி