புதுடெல்லி: உத்தரபிரதேசத்தின் குற்றப் பின்னணி அரசியல்வாதியான அத்தீக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் கடந்த சனிக்கிழமை இரவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களை சுட்டதாக அருண் மவுரியா (18), லவ்லேஷ் திவாரி (22), சன்னிசிங் (23) ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களில் லவ்லேஷ் திவாரி, தன் முகநூலில் பஜ்ரங் தள பாந்தா மாவட்ட இணைச் செயலாளர் எனத் தன்னை குறிப்பிட்டுள்ளார். இதை பஜ்ரங்தளம் தலைமை மறுத்துள்ளது. பாந்தாவின் கியோட்டரா கிராமத்தில் வசிக்கும் லவ்லேஷின் தந்தை யக்யாதிவாரி, ‘ஒரு பெண்ணை அறைந்ததற்காக எனது மகன் சில வருடங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையாகி இருந்தான். கடைசியாக அவன் ஆறு தினங்களுக்கு முன் வீட்டுக்கு வந்திருந்தான்’ எனக் கூறியுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் குற்றப் பின்னணி அரசியல்வாதியான அத்தீக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் கடந்த சனிக்கிழமை இரவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களை சுட்டதாக அருண் மவுரியா (18), லவ்லேஷ் திவாரி (22), சன்னிசிங் (23) ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Author: ஆர்.ஷபிமுன்னா