Advertisement
கோவை: அன்னூர் நீரேற்று நிலையத்துக்கு வந்த வந்த அத்திக்கடவு -அவிநாசி திட்ட நீரை மலர் தூவி விவசாயிகள், பொதுமக்கள் வரவேற்றனர்.
கொங்கு மண்டலத்தின் முக்கிய மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே சென்று விட்டது. இதனால் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக மாறின. இதற்கு தீர்வாக, பவானி ஆற்று உபரி நீரை பயன்படுத்தி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளை நிரப்ப ரூ.1,657 கோடி மதிப்பில் அத்திக்கடவு – அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டப்பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அன்னூர் நீரேற்று நிலையத்துக்கு வந்த வந்த அத்திக்கடவு -அவிநாசி திட்ட நீரை மலர் தூவி விவசாயிகள், பொதுமக்கள் வரவேற்றனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement