சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பயோவில் ‘அதிமுக பொதுச் செயலாளர்’ என மாற்றம் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வந்தார். தொடர்ந்து கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. அதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் ஆனார். பின்னர் கட்சியில் ஒற்றைத் தலைமை என்ற குரல் எழுந்தது. அவர் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் ஆனார். இது பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு.
அதிமுக-வின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் முன்னாள் தமிழ்நாடு முதல்வரும், தற்போதையை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், தனது ட்விட்டர் பயோவில் ‘அதிமுக பொதுச் செயலாளர்’ என அவர் மாற்றம் செய்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு