சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கிடையே, இத்தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விடுமுறை நாளான இன்று இதை அவசர வழக்காக உயர் நீதிமன்றம் விசாரிக்கிறது.
பழனிசாமி தரப்பினர் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை பழனிசாமி தரப்பினர் தொடங்கினர். இந்த நிலையில், மார்ச் 26-ம் தேதி பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும் என்று நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கிடையே, இத்தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Author: செய்திப்பிரிவு