Advertisement
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அதிமுக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது குறித்து அதிமுக வழக்கறிஞர்கள் தரப்பு அளித்த பேட்டியில், "அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அதிமுக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement