அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: பழனிசாமியின் மனு ஏற்பு

6

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில், நேற்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் பழனிசாமியின் மனு ஏற்கப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர்தேர்தல் கடந்த 17-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் 18-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்று, பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையே இந்த தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 19-ம் தேதி நடைபெற்ற விசாரணையில், தேர்தல் நடத்த தடையில்லை. ஆனால் முடிவை அறிவிக்கக் கூடாது எனஉத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை இரு தரப்பினரும் வரவேற்றனர்.

அதிமுக பொதுச் செயலாளர்தேர்தல் கடந்த 17-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் 18-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்று, பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.