சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து 8 மாதங்களுக்குப்பின், தீர்மானங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு செல்லாததாகி விட்டது. எனவே, ஒபிஎஸ் ஆதரவாளரின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டது. பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது எனவும், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏ. மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இபிஎஸ் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து 8 மாதங்களுக்குப்பின், தீர்மானங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு செல்லாததாகி விட்டது. எனவே, ஒபிஎஸ் ஆதரவாளரின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என இபிஎஸ் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.
Author: ஆர்.பாலசரவணக்குமார்