சென்னை: காவல் துறை பாதுகாப்பு கோரிய அதிமுக எம்.பி சி.வி.சண்முகத்தின் மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்பியுமான சி.வி.சண்முகம் கடந்த ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், "கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அன்று, என் வீட்டில் நுழைந்த மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதில், எனது மைத்துனர் கொல்லப்பட்டார். அதன்பின் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. எனது துப்பாக்கி உரிமத்தையும் புதுப்பித்து தரவில்லை.
காவல்துறை பாதுகாப்பு கோரிய அதிமுக எம்பி, சி.வி.சண்முகத்தின் மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Author: ஆர்.பாலசரவணக்குமார்