Advertisement
வாஷிங்டன்: அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகி மிகப் பெரிய தவற்றை ரஷ்யா செய்துவிட்டதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அணு ஆயுத இருப்பை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு உதவும் அணு ஆயுத (நியூ ஸ்டார்ட்) ஒப்பந்தத்தை கடந்த 2010-ம் ஆண்டு செக் குடியரசில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்யா அதிபர் டிமிட்ரி மெத்வதேவும் கையெழுத்திட்டனர். இதன் மூலம் உலகளவில் அணு ஆயுதங்கள் கட்டுக்குள் இருக்கும் என்று நம்பப்பட்டது.
அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகி மிகப் பெரிய தவறை ரஷ்யா செய்துவிட்டதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement