Advertisement
சென்னை: அடையாறு ஆற்றங்கரையை அலங்கரிக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரூ.1,500 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: சிங்கார சென்னையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 44 கி.மீ. நீளமுள்ள அடையாறு ஆற்றில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் போன்ற தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அடையாறு ஆற்றங்கரையை அலங்கரிக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரூ.1,500 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement