புதுடெல்லி: மேற்குவங்கம், பிஹாரின் சில பகுதிகள், ஒடிசா, சிக்கிம் மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கங்கை நதிக்கு தெற்கே உள்ள மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் மற்றும் பிஹார் மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப அலை தொடரும். அதேபோல் சிக்கிம், ஒடிசா மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரம் வரை வெப்ப அலை நீடிக்கும். ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகள், ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும்.
மேற்குவங்கம், பிஹாரின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Author: செய்திப்பிரிவு