புதுடெல்லி: பயணிகள் சிலரின் விரும்பத்தகாத செயல்களின் வீடியோக்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வைரலானதைத் தொடர்ந்து, ரயில் நிலையங்கள் மற்றும் பெட்டிகளில் காவலர்களின் ரோந்தை அதிகப்படுத்த டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
டெல்லி மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளில் சிலர் சகபயணிகளை கூசச் செய்யும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தநிலையில், சமீபத்தில், டெல்லி மெட்ரோ ரயில் பெட்டியின் தரையில் அமர்ந்திருக்கும் இளம் ஜோடி ஒன்று முத்தமிட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்று வைரலானது. இதனைத் தொடர்ந்து மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மெட்ரோ நிர்வாகம் கேட்டுக்கொண்டது.
பயணிகள் சிலரின் விரும்பத்தகாத செயல்களின் வீடியோக்கள் சமீபத்தில் வைரலானதைத் தொடர்ந்து, ரயில் நிலையங்கள் மற்றும் பெட்டிகளில் காவலர்களின் ரோந்தை அதிகப்படுத்த டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
Author: செய்திப்பிரிவு