உலகின் நுரையீரல் எனப்படும் பிரேசிலின் மழைக் காடுகள் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக எரிந்துக் கொண்டிருக்கிறது. அதிலுள்ள அரியவகை விலங்கினங்களும், தாவர, மர வகைகளும், ''உங்கள் உலகம் அழிந்து கொண்டிருக்கிறது'' என்பதை தங்களை எரித்து வரும் கனல்களின் மூலம் நமக்கு உணர்த்தி இருக்கின்றன.
அமேசான் மழைக் காடுகள் உலகம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி தனது மண்ணில் சேகரித்து வைத்துக் கொண்டு நமக்கு தேவையான அக்சிஜனை வெளியிடுக்கின்றன. இதன்மூலம் அமேசான் காடுகள் பருவ நிலைமாற்றத்திலிருந்து நம்மை காக்கும் காப்பாளர்களாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நமது காப்பாளர்கள் மீதுதான் பிரேசில் அதிபர் கத்தியை பாய்ச்சி இருக்கிறார்.
உலகின் நுரையிரல் எனப்படும் பிரேசிலின் மழைக் காடுகள் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக எரிந்துக் கொண்டிருக்கிறது. அதிலுள்ள அரியவகை விலங்கினங்களும், தாவர , மரவகைகளும் உங்கள் உலகம் அழித்துக் கொண்டிருக்கிறது என்பதை தங்களை எரித்து வரும் கனல்களின் மூலம் நமக்கு உணர்த்தி இருக்கின்றன.
இந்து குணசேகர்